ரயிலில் மோதல் : மூவர் காயம்

கொழும்பில் இருந்து சென்ற ரயிலில் சனிக்கிழமை இடம்பெற்ற மோதலில் மூவர் காயமடைந்து கம்பஹா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கொழும்பில் இருந்து கம்பஹா வரை ரயிலில் பயணித்த யுவதிக்கு கோட்டை நிலையத்தில் இருந்து ஹுணுப்பிட்டி வரை மட்டும் பயணச்சீட்டு வழங்கப்பட்டிருந்தது. கம்பஹாவில் வைத்து அவரை சோதனையிட்ட ரிக்கற் பரிசோதகர்கள் அபராதம் செலுத்த வேண்டுமெனக் கூறி அவரிடம் கட்டணம் வசூலிக்க முயன்றுள்ளனர்.

இதன் காரணமாக யுவதியின் சகோதரர் ஒருவருக்கும், பயணச்சீட்டு பரிசோதகர்கள் இருவருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டு தாக்குதலில் முடிந்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக ரயில்வே திணைக்களம் விசாரணையை ஆரம்பித்துள்ளதாக ரயில்வே போக்குவரத்து பிரதி பொது முகாமையாளர் தெரிவித்துள்ளார்.