ரணிலுக்கு ஆதரவு: வடிவேல் சுரேஷ் அறிவிப்பு

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம் ஆதரவளிக்கும் என அந்த சங்கத்தின் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான வடிவேல் சுரேஷ் தெரிவித்துள்ளார்.

ஹட்டனில் நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

சாதி பேதமின்றி பெருந்தோட்ட மக்கள் உட்பட நாட்டு மக்களுக்கு அளப்பரிய சேவையை ஆற்றி வரும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு, பெருந்தோட்ட மக்கள் உறுதுணையாக இருப்பார்கள் எனவும் வடிவேல் சுரேஷ் தெரிவித்துள்ளார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்