யாழ் இளைஞர்களின் முன்னுதாரணமான செயற்பாடு: மக்கள் பாராட்டு

-யாழ் நிருபர்-

யாழ்ப்பாணம் தென்மராட்சி வரணி நாவற்காடு கரம்பைக்குறிச்சி பகுதி மக்கள் மற்றும் விவசாயிகள் அதிகமாகப் பயன்படுத்துகின்ற பிரதான வீதியில் மழை காலங்களில் அதிகளவான வெள்ளநீர் தேங்கி நிற்பதன் காரணத்தால் குறித்த வீதியினூடாக போக்குவரத்து செய்யும் மக்கள் மற்றும் விவசாயிகள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வந்தனர்.

இந்நிலையில் நாவற்காடு, கரம்பைக்குறிச்சி இளைஞர்கள் அதிரடி முயற்ச்சியாக தமது நிதிப்பங்களிப்புடன் குறித்த வீதியினூடாக மக்கள் சிரமப்படாது செல்லும் வகையில் சீர் செய்துள்ளனர்.

இந்த வீதிக்கான சீர் செய்யும் வேலைகளுக்கு பயன்படுத்தப்பட்ட வாகனத்துக்கான செலவை முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் சி.பிரபாகரன் பொறுப்பேற்றுள்ளார்.

இவ்வாறான செயற்பாடு அனைவருக்கும் முன்னுதாரணமானது என்பது குறிப்பிடத்தக்கது.