யாழுக்கு படையெடுத்துள்ள தென்னிந்திய பிரபலங்கள்

யாழ் முற்றவெளி மைதானத்தில் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெறவுள்ள பிரபல தென்னிந்திய பாடகர் ஹரிகரனின் இசை நிகழ்வை முன்னிட்டு தென்னிந்திய கலைஞர்கள் யாழ்ப்பாணத்தை வந்தடைந்துள்ளனர்.

குறித்த குழு யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் ஊடாக நேற்று நண்பகல் யாழ்ப்பாணத்தை வந்தடைந்த போது கலை கலாசார நிகழ்வுகளுடன் சிறப்பான வரவேற்பளிக்கப்பட்டது.

இதையடுத்து பாடகர் ஹரிஹரன் உள்ளிட்ட இசைக் குழுவினர் நேற்று முன் தினம் யாழ்ப்பாணத்தை வந்தடைந்தனர்.

இதேவேளை இசை நிகழ்வில் தென்னிந்திய திரைப்பட பிரபலங்களான நடிகர் சிவா, பாலா, சேண்டி மாஸ்டர், சஞ்சீவ் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், திவ்ய தர்சினி, ஆல்யா மானசா , நந்தினி, மகா லட்சுமி உள்ளிட்ட பல கலைஞர்கள் இன்று யாழ்ப்பாணத்தை வந்தடைந்தனர்.