மோட்டார் சைக்கிள் மதிலுடன் மோதி விபத்து : மாணவன் உயிரிழப்பு

-யாழ் நிருபர்-

யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சுழிபுரம் சந்திக்கு அருகாமையில், இன்று வியாழக்கிழமை காலை இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில், 18 வயதுடைய மாணவன் ஒருவர்  உயிரிழந்துள்ளார்.

மேலதிக வகுப்புக்கு மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த இரண்டு மாணவர்கள், மறந்து வீட்டில் விட்டுச் சென்ற பணத்தினை எடுப்பதற்காக திரும்பி வந்துகொண்டிருந்த வேளை, அவர்களது மோட்டார் சைக்கிள் மதிலுடன் மோதி விபத்து இடம்பெற்றது.

இதன்போது, இரண்டு மாணவர்களும் படுகாயமடைந்த நிலையில், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டவேளை, ஒரு மாணவன் உயிரிழந்துள்ளார்.

மற்றைய மாணவன் படுகாயமடைந்த நிலையில், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்