மெக்சிகோவில் துப்பாக்கிச் சூடு: 8 பேர் பலி

மெக்சிகோவில் இந்த வார இறுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 8 பேர் உயிரிழந்துள்ளனர்.

துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இதேநேரம் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த ஏனைய 4 பேரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளனர்.

துப்பாக்கிப் பிரயோகத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்