மூத்த சகோதரி மீது அதிக பாசம் : வயதான தாயை கொன்ற இளைய மகள்!

தன்னை விட சகோதரி மீது அதிகம் அன்பு செலுத்திய வயதான தாயை மகள் கொலை செய்த சம்பவம் ஒன்று இந்தியாவில் இடம்பெற்றுள்ளது.

இந்தியாவின் மகாராஷ்டிர மாநிலத்தை சேர்ந்த சபீரா பானு ஷேக் (வயது 71) என்பவரே இவ்வாறு பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த பெண்ணுக்கும், அவரது இளைய மகளான ரேஷ்மா முஃபர் காசி (வயது 41) என்பவருக்கும் இடையே கடந்த  வியாழக்கிழமை ஏற்பட்ட கடுமையான வாக்குவாதமே இறுதியில் கொலையில் முடிந்துள்ளது

சபீரா பானு ஷேக், வயிறு, மார்பு, கழுத்து மற்றும் பிற உடல் பாகங்களில் பலமுறை குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார்.

கொலையை செய்த  பெண்ணை மகாராஷ்டிர பொலிஸார் கைது செய்துள்ளனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்