முற்றாக எரிக்கப்பட்ட மோட்டார் சைக்கிள்
அம்பலாங்கொடை பகுதியில் சந்தேகத்திற்கிடமான மோட்டார் சைக்கிள் ஒன்று எரித்து அழிக்கப்பட்ட நிலையில் அம்பலாங்கொடை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.
விஹாரகொட, பகுதியில் உள்ள மதில் சுவரை ஒட்டிய காணியில் இந்த மோட்டார் சைக்கிள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
அம்பலாங்கொடை பொலிஸாருக்கு கிடைத்த தகவலில் இந்த மோட்டார் சைக்கிள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுடன் செஸி இலக்கமும் அழிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
அம்பலாங்கொடை பிரதேசத்தில் அண்மையில் இடம்பெற்ற குற்றச்செயல் ஒன்றுக்கு மோட்டார் சைக்கிள் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என அம்பலாங்கொடை பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
அம்பலாங்கொடை தலைமையக பொலிஸ் நிலையத்தின் பிரதான பொலிஸ் பரிசோதகரின் பணிப்புரையின் பேரில் குற்றப் பிரிவு அதிகாரிகள் மற்றும் எல்பிட்டிய குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்