முறையான பயிற்சி இன்மை: இரண்டு சிறுவர்கள் உயிரிழப்பு

இந்தியாவில் நாமக்கல் மாவட்டம் கபிலர்மலை அருகே இன்று செவ்வாய்க்கிழமை காலை இடம்பெற்ற வாகன விபத்தில் இரண்டு சிறுவர்கள் உடல் நசுங்கி உயிரிழந்துள்ளனர்.

அய்யம்பாளையம் கிதாமத்தைச் சேர்ந்த லோகேஷ் ( வயது 17 ) மற்றும் சுதர்சன் ( வயது 14 ) எனும் சிறுவர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்த சிறுவர்கள் முறையான வயது மற்றும் பயிற்சியாளர் இல்லாமல் ஆம்னி வேன் ஓட்டி பழகியபோது எதிரே வந்த காருடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.

இதுகுறித்து தகவல் அறிந்து வந்த ஜேடர்பாளையம் பொலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்