
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபயவிற்கு சி.ஐ.டி அழைப்பு!
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை இன்று வெள்ளிக்கிழமை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.
கதிர்காமம் பகுதியில் உள்ள காணி ஒன்று தொடர்பாக முன்னெடுக்கப்படும் விசாரணை தொடர்பான சாட்சியங்களை பதிவு செய்வதற்காக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை குற்றப் புலனாய்வுத் திணைக்களம் அழைத்துள்ளது