முத்துராஜா யானையின் தந்தங்களை நீக்க வைத்தியர்கள் தீர்மானம்
இலங்கையிலிருந்து தாய்லாந்துக்குக் கொண்டு செல்லப்பட்ட முத்துராஜா என்ற யானையின் தந்தங்களை நீக்குவதற்குத் தாய்லாந்து யானைகள் பாதுகாப்பு வைத்தியர்கள் தீர்மானித்துள்ளனர்.
யானைகளின் நீண்ட தந்தங்களால் அவை நாளாந்தம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைக் கருத்திற்கொண்டே இந்த நடவடிக்கை எட்டப்பட்டுள்ளது.
இதன்மூலம் மலைப்பாங்கான பகுதிகளில் யானைகள் நடமாடும் போது தந்தங்கள் தரையில் படுவதால் ஏற்படும் அசௌகரியம் தடுக்கப்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
2001 ஆம் ஆண்டு இலங்கை அரசாங்கத்தினால் தாய்லாந்துக்கு முத்துராஜா யானை வழங்கிவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.