மியன்மாருக்கு மனிதாபிமான உதவியை வழங்கும் இலங்கை

மியன்மாரில் ஏற்பட்ட நில அதிர்வினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 1 மில்லியன் அமெரிக்க டொலரை மனிதாபிமான உதவியாக வழங்க இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் வைத்து அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ இதனைக் குறிப்பிட்டார்.

அத்துடன் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சுகாதாரத் துறை சார்ந்த உதவிகளை வழங்கவும் அரசாங்கம் தயாராக உள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்