மின்னல் தாக்கி கால்பந்து வீரர் மரணம்

இந்தோனேஷியாவில் கால்பந்து விளையாடிக்கொண்டிருந்த போது மின்னல் தாக்கத்திற்கு இலக்காகி கால்பந்து வீரர் உயிரிழந்துள்ளார்.

கால்பந்து வீரர் செப்டெய்ன் ரஹர்ஜா(வயது – 35) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இந்தோனோஷியாவில் பாண்டுங் மற்றும் சுபாங் ஆகிய கால்பந்துகிளப் அணிகளுக்கிடையேயான நட்புரீதியான போட்டி கடந்த 11ஆம் திகதி நடைபெற்றது.

இதன்போது மைதானத்தில் களத்தில் விளையாடி கொண்டிருந்த குறித்த வீரர் மீது மின்னல் தாக்கிய நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோது சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.