மின்சார சபைக்கு முக்கிய அறிவிப்பு

 

மின் கட்டண குறைப்பு முன்மொழிவுகளை நாளை வியாழக்கிழமை முன்வைக்குமாறு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு இலங்கை மின்சார சபைக்கு அறிவித்துள்ளது.

இது தொடர்பான முன்மொழிவுகள் இம்மாதம் முதலாம் திகதி வழங்கப்பட வேண்டியிருந்த போதிலும், மின்சார சபை விடுத்த கோரிக்கைக்கு அமைய கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளதாக பயன்பாட்டு ஆணைக்குழுவின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

முன்மொழிவுகள் கிடைத்தவுடன் மின்கட்டணத்தை குறைப்பதற்கான நடவடிக்கைகள் தொடங்கப்படும் என்றும், வரும் ஜூலை மாதம் மின்கட்டண குறைப்பு சதவீதம் அறிவிக்கப்படும் என்றும் பேச்சாளர் கூறினார்.

 

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்