மின்சாரம் தாக்கி 2 காட்டு யானைகள் மரணம்

கருவலகஸ்வெவ – செவனுவர பிரதேசத்தில் இரண்டு இடங்களில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த இரண்டு காட்டு யானைகளின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

தனியார் காணி ஒன்றில் பொருத்தப்பட்டிருந்த மின் வேலியில் மின்சாரம் தாக்கி இந்த இரண்டு யானைகளும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது அனுமதியின்றி கட்டப்பட்டுள்ள மின்வேலியா என விசாரணை நடத்தி வருவதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்