மின்சாரம் தாக்கி பெண் உயிரிழப்பு

இந்தியாவில் உளுந்தூர்ப்பேட்டை அருகே மரத்தின் மேலே ஏறி கிளைகளை வெட்டும்போது இரும்புக் கைப்பிடியால் ஆன அரிவாள் உயர் அழுத்த மின்கம்பியில் உரசியதால் மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்ட பெண் உயிரிழந்துள்ளார்.

குறித்த பெண் வண்டிப்பாளையம் கிராமத்தில் ராஜசேகர் என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் உள்ள மரங்கள், உயர் அழுத்த மின்கம்பிகள் மேல் உரசியதால் கிளைகளை வெட்டும் பணியில் ஈடுபட்டிருந்தார்.

இதன்போது குறித்த பெண்ணின் அரிவாள் மின்கம்பியில் பட்டு மின்சாரம் பாய்ந்ததில் அவர் சுமார் 20 அடி உயரத்திலிருந்து கீழே விழுந்து உயிரிழந்தார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்