
மாத்தறையில் பேருந்து விபத்து: 61 பேர் படு காயம்
மாத்தறை – கந்தர – தலல்ல பகுதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை இடம்பெற்ற விபத்தில் 61 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
எம்பிலிப்பிட்டியவிலிருந்து மாத்தறை நோக்கி பயணித்த தனியார் பேருந்தும், தங்காலையிலிருந்து மாத்தறை நோக்கி பயணித்த தனியார் பேருந்தும் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
விபத்தில் மூன்று குழந்தைகள் உட்பட 61 பேர் காயமடைந்த நிலையில் அவர்களில் ஆறு பேர், கவலைக்கிடமான நிலையில், மாத்தறை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
விபத்தில் இரண்டு பேருந்துகளும் பலத்த சேமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்