மாணிக்கல் அகழ்வில் ஈடுபட்ட 13 பேர் கைது

-பதுளை நிருபர்-

ஹப்புத்தளை விகாரகல பகுதியில் சட்டவிரோதமான முறையில் மாணிக்கல் அகழ்வில் ஈடுபட்ட 13 பேர், கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் அம்பாறை, கல்கமுவ, மஹரகம, பண்டாரவளை, அடம்பிட்டிய, வெவெல்தெனிய, மாகொல மற்றும் கொழும்பு 05 ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

ஹப்புத்தளை, விகாரகல கித்துல்கஹவத்த பகுதியில் சட்டவிரோதமான முறையில் மாணிக்கக்கல் அகழ்வில் சிலர் ஈடுபட்டு வருவதாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைய பொலிஸார் குறித்த பகுதியை சுற்றி வளைத்து தேடுதல் மேற்கொண்ட போது குறித்த 13 சந்தேக நபர்களும் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் அத்தோடு மாணிக்கல் அகழ்வுக்கு பயன்படுத்தபடும் சில உபகரணங்களும் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

விசாரணையில் பின்னர் சந்தேக நபர்களை பண்டாரவளை நீதிமான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.