மாடு கடத்தலில் ஈடுபட்ட இருவர் கைது

-பதுளை நிருபர்-

பசறை நகரில் சட்ட விரோதமான முறையில் அனுமதிப்பத்திரம் இன்றி மாடு ஒன்றை ஏற்றிச் சென்ற லொறி சந்தேகநபர்கள் இருவருடன் இன்று வியாழக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளதாக பசறை பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 38 மற்றும் 26 வயதுடைய யூரி தோட்டம் அகரதென்ன மற்றும் பசறை பிபிலை வீதி 13 கட்டை பகுதியை சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.

லுனுகல ஹொப்டன் பகுதியில் இருந்து சிறிய லொறி ஒன்றில் மாடு ஒன்று சட்டவிரோதமான முறையில் கொண்டு செல்லப்படுவதாக பசறை பொலிஸ் போக்குவரத்து பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைய பொலிஸாரால் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் பதுளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.