மல்லாவியில் மோட்டார் வண்டிக்கு தீவைப்பு

-யாழ் நிருபர்-

முல்லைத்தீவு – மல்லாவி கல்விளான் பகுதியில் வயல் வெளியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் ஒன்று நேற்று புதன் கிழமை இரவு இனந்தெரியாத நபர்களினால் தீவைக்கப்பட்டுள்ளது.

கல்விளான் பகுதியில் வயற்காவல் நடவடிக்கையில் ஈடுபட்டு கொண்டிருந்த விவசாயி ஒருவரின் மோட்டார் சைக்கிளே இவ்வாறு எரியூட்டப்பட்டுள்ளது.

மேலும் இதற்கான காரணம் இது வரையில் கண்டறியப்படவில்லை.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மல்லாவி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்

Minnal24 FM