மலேசியாவில் பணிக்கு சென்ற மஸ்கெலியா இளைஞன் உயிரிழப்பு

மலேஷியாவிற்கு பணிக்கு சென்ற மஸ்கெலியா பகுதியில் உள்ள இளைஞர் அங்கு பொயிலர் வெடித்து பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

மஸ்கெலியா புரவுன்ஷீக் தோட்ட மோட்டிங்ஹேம் பிரிவைச் சேர்ந்த துரைராஜ் ராஜ்குமார் டேவிட்சன் (வயது – 24) என்ற இளைஞனே இவ்வாறு உயிர் இழந்துள்ளார்.

குறித்த இளைஞன் கடந்த ஒரு வருடத்திற்கு முன்னர் இலங்கையில் இருந்து மலேஷியாவிற்கு சென்று அங்குள்ள நீர் சுத்திகரிப்பு நிறுவனமொன்றில் பணியாற்றி வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் ஞாயிற்று கிழமை அவர் பணியாற்றி கொண்டு இருந்த போது இவ்வாறு பொயிலர் வெடித்து உயிர் இழந்துள்ளார்.

இதேவேளை உயிரிழந்த இளைஞனின் சடலத்தை இலங்கைக்கு கொண்டு வரும் நடவடிக்கையில் உறவினர்கள் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்