மலச்சிக்கல் தீர எளிய வழிகள்

மலச்சிக்கல் தீர எளிய வழிகள்

மலச்சிக்கல் தீர எளிய வழிகள்

💢குடல் என்பது ஜீரண மண்டலத்தின் ஒரு பகுதியாகும். குடலில் ஏற்படும் கோளாறுகள் உடல் இயக்கத்தை பெருமளவில் பாதிக்கிறது. அதில் முக்கியமானது மலச்சிக்கல் ஆகும். ஒரு வாரத்தில் 3 அல்லது அதற்கும் குறைவான தடவை மலம் வெளியேறினால், அல்லது மலம் மிகவும் வலியுடனுடம் மிகவும் உலர்ந்தும் வெளியேறினால் அதைத்தான் மலச்சிக்கல் என ஆங்கில மருத்துவம் கூறுகிறது.

மலச்சிக்கல் தீர எளிய வழிகள்
 1. வெதுவெதுப்பான பாலில் 1 டீஸ்பூன் நெய் சேர்த்து கலந்து, இரவில் படுக்கும் முன் குடித்தால், மறுநாள் காலையில் மலச்சிக்கல் பிரச்சனை இருந்த இடம் தெரியாமல் அகலும்.
 2.  இஞ்சியின் ஒரு துண்டை எடுத்து வாயில் போட்டு, நன்றாக மென்று அதன் சாற்றினை விழுங்க வேண்டும். இதன்மூலம் செரிமானம் மேம்படுத்தப்பட்டு, மலச்சிக்கலில் இருந்து நல்ல நிவாரணம் கிடைக்கும்.
 3. அரை மூடி எலுமிச்சைப் பழச் சாற்றை, வெதுவெதுப்பான நீரில் பிழிந்து ஒரு சிட்டிகை உப்பை நன்றாக கலந்து காலை எழுந்தவுடன் குடிக்க மலச்சிக்கல் தீரும்.
 4. தினமும் அரை டம்ளர் நெல்லிக்காய் சாறை குடித்து வர, குடலியக்கமானது நன்கு செயல்பட்டு, நாள்பட்ட மலச்சிக்கல் கூட குணமாகும்.
 5. செம்பருத்தி இலைகளை தூள் செய்து, தினம் இருவேளை சாப்பிட்டு வர மலச்சிக்கல் தீரும்.
 6. விளக்கெண்ணெயை தினமும் ஆசன வாயில் தடவ மலச்சிக்கல் தீரும்.
 7. ஆப்பிள், பிளம்ஸ் மற்றும் பேரிக்காயை சாப்பிட மலச்சிக்கல் உண்டாகாமல் தடுக்கும்.
 8. தினமும் இரவில் இரண்டு அல்லது மூன்று பேரிச்சம்பழங்களை சாப்பிட்டு பின்னர் சுடுதண்ணீர் அருந்த மலச்சிக்கல் தீரும்.
 9.  பீட்ரூட்டை பொரியல் செய்து சாப்பிட மலச்சிக்கல், இரத்தசோகை தீரும்.
 10. கொய்யாப்பழத்தை தொடர்ந்து இரவில் சாப்பிட்டுவர மலச்சிக்கல் தீரும்.
 11.  வில்வ இலைத்தூள் அரைத் தேக்கரண்டி, வெண்ணையில் கலந்து இரவு உணவுக்குப் பின் சாப்பிட வயிற்றுப்புண், மலச்சிக்கல் குணமாகும்.
 12. கறிவேப்பிலை, இஞ்சி, மிளகு, சீரகம், பெருங்காயம் சேர்த்திடித்து பொடிசெய்து, அரை தேக்கரண்டி  இரவு உணவுடன் கொள்ள மலச்சிக்கல் தீரும்.
 13. கொதிக்கும் நீரில் இஞ்சியைத் தட்டிப் போட்டு, பின் அதை வடிகட்டி,  அதில் தேன் கலந்து குடித்து வந்தால், குடலியக்கம் சீராகி, மலச்சிக்கல் பிரச்சினை நீங்கும்.
 14. கரும்பு ஜூஸில் இஞ்சியைத் தட்டிப் போட்டு, தேன் கலந்து குடித்து வந்தால், மலச்சிக்கல் பிரச்சனையை தடுக்கலாம்.
 15. காபி, தேநீர், மென்பானங்கள் குடிப்பதை தவிர்த்து, இளநீர், பழச்சாறுகளை அதிகம் அருந்த வேண்டும்.
 16. தினமும் நடைப்பயிற்சி செய்ய வேண்டியது மிக அவசியம். இயலாதவர்கள் வீட்டிலேயே செய்யக்கூடிய உடற்பயிற்சிகளைச் செய்யலாம். மலம் கழிப்பதற்கென போதுமான நேரத்தை ஒதுக்க வேண்டியது மிகவும் முக்கியம்.
 17. நார்ச்சத்து நிறைந்த கோதுமை, கேழ்வரகு, தினை, வரகு, கொள்ளு போன்ற முழுதானியங்கள் மலச்சிக்கலைத் தவிர்க்க உதவும்
 18. 3 தேக்கரண்டி விளக்கெண்ணையுடன் சிறிது இஞ்சிச்சாறு கலந்து சாப்பிட மலச்சிக்கல் தீரும்.
 19. சோற்றுக்கற்றாழையின் சோற்றை காயவைத்து, பொடித்து, 2 சிட்டிகை சம அளவு மஞ்சள் தூளுடன், 50மிலி நீரில் பருக மலச்சிக்கல் தீரும்.
 20. ஆமணக்கு விதைப்பருப்பை தண்ணீரில் ஊற வைத்து அரைத்து சாப்பிட மலக்கட்டு தீரும்.

மலச்சிக்கல் தீர எளிய வழிகள்

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்