மருதமுனையில் மாபெரும் கண்டன பேரணி

-அம்பாறை நிருபர்-

இஸ்ரேல் யுத்தத்தை நிறுத்தி அப்பாவி உயிர்களை படுகொலை செய்வதை கைவிடவேண்டும் என தெரிவித்து மருதமுனையில் மாபெரும் கண்டன பேரணி நேற்று வெள்ளிக்கிழமை ஜும்மா தொழுகையின் பின்னர் நடைபெறறது.

இதன் போது ஐ.நா சபை அமைதி காப்பதன் மர்மம் என்ன? இன்ஷா அல்லாஹ் இறைவனின் நீதி கிடைக்கும் என கலாநிதி எம்.எல் முபாரக் மதனி உருக்கமான உரையாற்றினார்.

அதுமாத்திரமன்றி இதன் போது குறித்த கண்டனப்பேரணி முடிவில் மருதமுனை ஜம்இய்யதுல் உலமா சபை தலைவர் எப்.எம்.அஹமது அன்சார் மொலானா விசேட மகஜரை பிரதேச செயலாளர் ஜெ.லியாக்கத் அலியிடம் பள்ளிவாசல்களின் தலைவர்கள் சகிதம் ஒன்றிணைந்து கையளித்தனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்