மரம் முறிந்து வீழ்ந்ததில் அஞ்சல் அதிபர் உயிரிழப்பு

தம்புள்ளை – சிசிரவத்தை பகுதியில் மரம் முறிந்து வீழ்ந்ததில் ஒருவர் உயிரிழந்தார்.

தம்புள்ளை சிசிரவத்தை பகுதியைச் சேர்ந்த 73 வயதுடைய ஓய்வு பெற்ற அஞ்சல் அதிபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்;

முறிந்து வீழ்ந்த மரத்தை சிலர் வெட்டிக் கொண்டிருந்த போது, மரத்தின் கீழ் நின்றவர் மீது மரம் வீழ்ந்ததில் அவர் படுகாயம் அடைந்து தம்புள்ளை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.