மன அழுத்தத்தினால் பாதிக்கப்படும் உறுப்புக்கள்

மன அழுத்தத்தினால் பாதிக்கப்படும் உறுப்புக்கள்

மன அழுத்தத்தினால் பாதிக்கப்படும் உறுப்புக்கள்

🔴தற்போதைய பிஸியான காலகட்டத்தில், பெரும்பாலானோர் மன அழுத்தத்தால் போராடி வருகின்றனர். மன அழுத்தம் என்பது உணர்ச்சி அல்லது உடல் பதற்றத்தின் உணர்வாகும். இந்த மன அழுத்தமானது விரக்தியாகவோ, கோபமாகவோ அல்லது பதட்டமாகவோ உணரச் செய்யும் எந்த ஒரு நிகழ்வு அல்லது எண்ணத்தில் இருந்தும் வரலாம்.

🔴ஒருவர் மன அழுத்தத்தில் இருந்தால், அது ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரி வெளிப்படுத்தும். அதில் சிலர் நெஞ்சு பகுதியில் மிகுந்த அழுத்தத்தை உணரக்கூடும், இன்னும் சிலர் முகப்பரு பிரச்சனையை சந்திக்க நேரிடும். ஏனெனில் மன அழுத்தமானது உடலில் மோசமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

🔴குறிப்பாக ஒருவர் மன அழுத்தம் அடையும் போது, உடலின் ஒவ்வொரு உறுப்புக்களும் ஒவ்வொருவிதத்தில் பாதிக்கப்படுகிறது. இப்போது மன அழுத்தம் அடையும் போது உடலுறுப்புக்கள் எப்படி பாதிக்கப்படுகிறது என்பதைப் பார்ப்போம்.

தசைகள் மற்றும் மூட்டுகள்

📍மன அழுத்தமானது தசைகளில் வலி மற்றும் காயங்களை ஏற்படுத்துகிறது. மேலும் இது தசைகளில் பிடிப்புக்களையும் உண்டாக்கும். ஏனெனில் மன அழுத்தம் கொள்ளும் போது, தசைகள் பதற்றமடைகின்றன. இன்னும் தீவிர நிலையில், இது கீல்வாதம், ஃபைப்ரோமியால்ஜியா மற்றும் பிற நிலைமைகளின் அறிகுறிகள் தீவிரமாக வழிவகுக்கும்.

இதயம்

📍அதிக மன அழுத்தம் கொள்ளும் போது கார்டிசோல் மற்றும் அட்ரீனலின் அதிகரித்து, இதயத் துடிப்பு மற்றும் இரத்த அழுத்தத்தை அதிகரிக்கிறது. கூடுதலாக இந்த ஹார்மோனானது இரத்த நாளங்களை இறுக்கமடையச் செய்து, தசைகளுக்கு அதிகளவிலான ஆக்ஸிஜனை மாற்றிவிடுகிறது. இதன் விளைவாக சுவாசிப்பதில் மாற்றத்தை சந்திக்க நேரிட்டு, சுவாச பிரச்சனைகளை உண்டாக்குகிறது.

நோயெதிர்ப்பு மண்டலம்

📍மன அழுத்தம் உடலில் வலிகளை மட்டும் ஏற்படுத்துவதில்லை, ஒருவரது நோயெர்ப்பு மண்டலத்தையும் மோசமாக பாதித்து, நோயெதிர்ப்பு மண்டலத்தை பலவீனப்படுத்துகிறது. எனவே மன அழுத்தத்தால் உடலின் நோயெதிர்ப்பு மண்டலம் பலவீனமாகாமல் இருக்க தினமும் உடற்பயிற்சி, யோகா, தியானம் போன்றவற்றில் ஈடுவடுவதோடு, ஆரோக்கியமான உணவுப் பழக்கத்தையும் ஏற்படுத்த வேண்டும்.

குடல்

📍மன அழுத்தமானது செரிமான மண்டலத்தில் தாக்கத்தை ஏற்படுத்துவதாக தெரிய வந்துள்ளது. அதுவும் வயிற்று வலி, வாயு தொல்லை, மலச்சிக்கல் போன்ற எளிய செரிமான பிரச்சனைகள் முதல், எரிச்சலூட்டும் குடல் நோய்க்குறி மற்றும் நெஞ்செரிச்சல் வரை தீவிர செரிமான பிரச்சனைகள் வரை உண்டாக்கும்.

தோள்பட்டை, தலை மற்றும் தாடை

📍உடலில் மன அழுத்தம் அதிகரிக்கும் போது, அதன் விளைவாக தோள்பட்டை, தலை மற்றும் தாடை பகுதிகளில் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும். ஆய்வுகளின் படி, மன அழுத்தம் மற்றும் பதட்டமானது தலைவலி, கழுத்து மற்றும் தாடையில் இறுக்கம் மற்றும் கழுத்து, தோள்பகுதிகளில் பிடிப்புக்கள் போன்றவற்றை ஏற்படத் தூண்டும்.

சருமம் மற்றும் தலைமுடி

📍மன அழுத்தமானது உடலுறுப்புக்களில் மட்டுமின்றி, சருமம் மற்றும் தலைமுடியிலும் மோசமான தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. குறிப்பாக அதிக மன அழுத்தமானது சருமத்தில் அரிப்புமிக்க அழற்சி, தடிப்பு தோல் அழற்சி போன்ற சரும பிரச்சனைகளை தீவிரமாக்கும். அதேப் போல் அதிக பதட்டமானது, தலைமுடி உதிர்வை அதிகரித்து, கொத்து கொத்தாக முடியை உதிரத் தூண்டும்.

மன அழுத்தத்தினால் பாதிக்கப்படும் உறுப்புக்கள்

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்