மன்னார் மாவட்டத்தின் முதலாவது இளம் நீதிபதி: அரியரட்ணம் வில்பிரட் அர்ஜுன்
-மன்னார் நிருபர்-
மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் 7 வருடங்களாக சிறப்பாக சேவையாற்றிய சட்டத்தரணி அரியரட்ணம் வில்பிரட் அர்ஜுன் எதிர்வரும் 1ஆம் திகதி தொடக்கம் இலங்கையின் நீதிச்சேவை ஆணைக்குழுவினால் நீதிபதியாக நியமிக்கப்படவுள்ளார்.
மன்/புனித சவேரியார் ஆண்கள் கல்லூரியில் தனது பாடசாலை கல்வியை பெற்றுக்கொண்ட அர்ஜுன் மன்னார் மாவட்டத்தின் வரலாற்றில் முதலாவது இளம் வயதில் நீதிபதியாகவும் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
அண்மையில் நீதிச்சேவை ஆணைக்குழுவினால் நீதிபதிகளை உள்வாங்குவதற்கு என இடம் பெற்ற போட்டி பரீட்சையில் தேசிய ரீதியாக சித்தியடைந்ததுடன் 14 ஆவது நிலையையும் பெற்றுக்கொண்டார்.
நாடளாவிய ரீதியில் டிசம்பர் மாதம் 1 திகதி 25 பேர் நீதிபதிகளாக கடமைகளை பொறுப்பேற்க உள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்