மன்னார் தலைமை பொலிஸ் நிலையம் ஏற்பாடு செய்த “வெசாக் போயா” தின தான உபசாரம்

 

-மன்னார் நிருபர்-

மன்னார் தலைமை பொலிஸ் நிலையம் ஏற்பாடு செய்த ‘வெசாக் போயா’ தின தான உபசாரம் இன்று வெள்ளிக்கிழமை காலை மன்னார் பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக இடம் பெற்றது.

மன்னார் சமூக பொலிஸ் பிரிவு மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்களும் குறித்த நிகழ்வில் கலந்து கொண்டிருந்தனர்.

இதன் போது அப்பகுதியினால் சென்ற மக்களுக்கு தான உபகாரம் வழங்கி வைக்கப்பட்டது.

குறித்த நிகழ்வில் மன்னார் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர், மன்னார் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உட்பட பலர் கலந்து கொண்டிருந்தனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்