மனித அடையாளத்தை மறைத்து நாயாக மாறிய மனிதன்…

ஜப்பானை சேர்ந்த இளைஞர் ஒருவருக்கு ஏற்பட்ட வினோத ஆசையால், உலகம் முழுவதும் பிரபலமடைந்துள்ளார்.

ரீல்ஸ் போட்டு சமூகவலைதளங்களில் வைரலான பலரை பார்த்திருப்போம். ஆனால் கொஞ்சம் புது விதமாக, நாயாக மாறி ஒருவர் உலக பிரபலமாகி வியப்பை ஏற்படுத்தி உள்ளார்.

ஜப்பானை சேர்ந்த டோகோ (Toco) என்பவருக்கு சிறு வயது முதலே நாய்கள் மீது தீராத காதலாம். நாயாக பிறந்திருக்கலாம் என்று அடிக்கடி நண்பர்களிடம் கூறிக்கொண்டே இருந்துள்ளார். திடீரென ஒரு நாள் நாயாகவே மாறி அதிர்ச்சியையும் தந்துள்ளார். அதற்காக இந்திய மதிப்பில் சுமார் 12 லட்சம் ரூபாய் செலவழித்து நாய் உடையை உருவாக்கி அதை அணிந்து நகரை வலம் வர, இதை உண்மை என்று நம்பி டோகோவுடன், அப்பகுதியில் உள்ள நாய்கள் நட்பை வளர்த்துள்ளன.

collie வகை நாயாக மாறி உள்ள டோகோ, மற்றவர்கள் கொடுக்கும் போலி மரியாதையை விரும்பாததால், தனது மனித அடையாளத்தை மறைக்க விரும்பியதாகவும் தனது வாழ்நாள் கனவு நிறைவேறிவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

டோகோ, I want to be an animal என்ற யூடியூப் சேனல் ஒன்றையும் நடத்தி வருகிறார். சுமார் 35,000 சப்ஸ்கிரைப்பர்களை கொண்ட இந்த சேனலில், collieயாக உள்ளபோது அவரின் அன்றாட வாழ்க்கை முறை, அவ்வப்போது செய்யும் குறும்புகள் உள்ளிட்டவற்றை Vlogளாக பதிவிட்டு வருகிறார்.

தொலைக்காட்சி விளம்பரங்கள் மற்றும் மோஷன் பிக்சர்களுக்கு ஆடைகளை உருவாக்கும் ஜப்பானிய வணிகமான Zeppet, டோகோவுக்கான இந்த ஆடையை வடிவமைத்துள்ளது. அவரின் மொத்த அடையாளத்தையும் மறைத்து முழுமையான ஒரு நாயாக மாற்ற 40 நாட்கள் ஆனதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்