மத நிகழ்வில் சன நெரிசல் – 87 பேர் பலி

இந்தியாவின் உத்தரப் பிரதேசத்தில் இடம்பெற்ற மத நிகழ்வொன்றில் ஏற்பட்ட சன நெரிசலில் சிக்கிப் பலியானோர் எண்ணிக்கை 87ஆக அதிகரித்துள்ளது.

உத்தரப்பிரதேசத்தில் உள்ள ஹத்ராஸில் நடைபெற்ற சட்சாங் பிரார்த்தனை நிகழ்வில் ஏற்பட்ட கடும் சன நெரிசலிலேயே இந்த மரணங்கள் பதிவாகியுள்ளன.

இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்று அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.

மேலும் பலர் பாதிக்கப்பட்ட நிலையில் வைத்தியசாலைகளுக்குக் கொண்டு செல்லப்பட்டவண்ணம் இருப்பதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்