மண்மேடு வீழ்ந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார்

கண்டி, அனிவத்த பிரதேசத்தில் மண்மேடு வீழ்ந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

திகன ரஜவெல்ல பிரதேசத்தில் வசித்த ஈ.எம்.பி.டபிள்யூ. ஏகநாயக்க (வயது – 49) என்பவரே உயிரிழந்துள்ளார்.

இவர் சுவரை நிர்மாணிப்பதற்காக அத்திவாரம் வெட்டிக் கொண்டிருந்தபோது, மண்மேடு சரிந்து அவர் மீது வீழ்ந்த நிலையில் அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.

சம்பவம் தொடர்பில் கண்டி தலைமையக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.