
மண்மேடு சரிந்து விழுந்ததில் ஒருவர் படுகாயம்!
-பதுளை நிருபர்-
பதுளை-பசறை வீதியில், மண்மேடு சரிந்து விழுந்ததில், மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக, பசறை பொலிஸார் தெரிவித்தனர்.
காயமடைந்த நபர், கோணக்கலை பசறை டிவிஷன் பகுதியை சேர்ந்த 26 வயதுடையவர், என பசறை பொலிஸார் தெரிவித்தனர்.
பசறையில் இருந்து கோணக்கலை பசறை டிவிஷன் பகுதிக்கு சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் மீது, பசறை பால் சபைக்கு அருகாமையில் மண்மேட்டுடன் வெட்டி வைக்கப்பட்டிருந்த மரம் ஒன்றின் அடிக்கட்டை சரிந்து விழுந்தமையினால், மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் பலத்த காயமடைந்துள்ளார்.
காயமடைந்தவர் பசறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
பதுளை பசறை வீதியில் விழுந்துள்ள மண்மேட்டினை அகற்றும் பணிகளில் வீதி அபிவிருத்தி அதிகாரசபை ஊழியர்கள் ஈடுபட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்