மண்சரிவு: 4 பேர் மாயம்

பலாங்கொடை – கவரன்ஹேன – வெயின்தென்ன பகுதியில் நேற்று ஞாயிற்று கிழமை இரவு ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி நால்வர் காணாமல் போயுள்ளதாகவும் 3 வீடுகள் சேதமடைந்துள்ளதாவும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை, தாய், இரண்டு பிள்ளைகளே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மண்சரிவினால் பகுதியளவில் சேதமடைந்த இரண்டு வீடுகளிலிருந்த ஒன்பது பேர் அருகிலுள்ள தங்குமிடம் ஒன்றில் பாதுகாப்பாக தங்கவைக்கப்பட்டுள்ளதுடன் மண்சரிவில் சிக்கியிருந்த ஒருவர் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், மண்சரிவில் சிக்கி காணாமல் போனவர்களை தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்