மட்டு. கோட்டைக்கல்லாறு மகா வித்தியாலயம் தேசிய மட்ட பரதநாட்டியம் போட்டியில் 2ஆம் இடம் பெற்று சாதனை
-செ.துஜியந்தன்-
அனுராதபுரம் மத்திய கல்லூரியில் நடைபெற்ற அகில இலங்கை பரதநாட்டியம் தேசியமட்டப்போட்டியில் மட்டக்களப்பு பட்டிருப்பு கல்வி வலயத்தில் இருந்து கலந்து கொண்ட கோட்டைக்கல்லாறு மகா வித்தியாலயம் மாணவிகள் பரதநாட்டியம் சிரேஸ்ட பிரிவு -1 இல் சுதந்திரம் எனும் தலைப்பில் நடைபெற்ற புத்தாக்க நடனப் போட்டியில் தேசிய மட்டத்தில் இரண்டாம் இடம் பெற்று,வலயத்திற்கும்,பாடசாலைக்கும்,கிராமத்திற்கும் பெருமை தேடிக் கொடுத்துள்ளனர்.
கோட்டைக்கல்லாறு மகா வித்தியாலயமானது தேசிய மட்டத்தில் நடைபெற்ற பரதநாட்டியப் போட்டி ஒன்றில் கலந்து கொண்டு இரண்டாம் இடம் பெற்று பாடசாலை வரலாற்றில் சாதனை படைத்துள்ளது.
நடன ஆசிரியை திருமதி பிரஷன்யா சுரேஸ் நெறிப்படுத்தல் மற்றும் சங்கீத ஆசிரியை திருமதி ஜோதி ஜெயராஜ் பங்கேற்புடன் மாணவிகளான அனுர்திகா, சேஷானிகா ,அஸ்மிதா,கிருஷ்டிகா,சப்தனாரக்ஸி,கிருஷ்ணிகா,க்சனா, டுக்சாயினி ஆகியோரின் ஆற்றுகையில் நடைபெற்ற நடனப் போட்டியிலே இம் மாணவிகள் தேசிய மட்டத்தில் இரண்டாம் இடம் பெற்று சாதனை படைத்துள்ளனர்.
இநத் நடனத்திற்கான பாடல் வரிகளை ஆசிரியர் சிங்காரவேல் எழுதியிந்தார். தேசிய மட்டத்தில் இச் சாதனையை புரிவதற்கு உறுதுணையாக இருந்து மாணவிகளை வழிப்படுத்திய நடன ஆசிரியை மற்றும் சங்கீத ஆசிரியை உட்பட ஒத்துழைப்பு வழங்கிய ஏனைய ஆசிரியர்கள், பாடசாலை சமூகத்தினர், மாணவர்கள் ஆகியோருக்கு அதிபர் சி.சசிதரன் தமது நன்றியினையும் பாராட்டுதலையும் தெரிவித்துள்ளார்.