மட்டு. களுதாவளையில் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளான பேருந்து

-வெல்லாவெளி நிருபர்-

மட்டக்களப்பு களுதாவளையில் வீதியை விட்டு விலகி தனியார் பேருந்து ஒன்று நேற்று செவ்வாய்க்கிழமை விபத்துக்குள்ளாகியுள்ளது.

மட்டக்களப்பு கல்முனை பிரதான வழித்தடத்தின் ஊடாக மட்டக்களப்பிருந்து கல்முனை நகர் நோக்கி பயணித்துக்கொண்டிருந்த பேருந்தின் ரயர்வெடித்ததன் காரணமாக வீதியை விட்டு விலகி வீட்டு மதில் ஒன்றுடன் மோதிய நிலையில் தனது பயணத்தை நிறுத்திக்கொண்டது.

இவ் விபத்தில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை என்பதுடன் விபத்து தொடர்பான விசாரணைகளை களுவாஞ்சிகுடி பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.