மட்டக்களப்பு மாவட்டத்தில் பல உயிர்களையும், உடமைகளையும் காவு கொண்ட கொடூர சூறாவளி இடம்பெற்று இன்றோடு 46 வருடங்கள் நிறைவடைகின்றன.
மட்டக்களப்பில் 1978 நவம்பர் 23 ஆம் திகதி பாரிய சூறாவளி ஏற்பட்டது, அன்றையதினம் ஒரு வியாழக்கிழமை, சூறாவளி எனும் பயங்கரக் காற்று வீச தொடங்கியது. வியாழன் நண்பகலிலிருந்து காற்றின் வேகம் அதிகரிக்கத் தொடங்கி, அன்றிரவு 8.30 மணியளவில் சற்றுத் தணிந்து, மீண்டும் வீசத் தொடங்கிய காற்று விடியும் வரை அகோரத் தாண்டவமாடி மட்டக்களப்பை சின்னா பின்னப்படுத்தியது என்று சொல்லப்படுகின்றது.
இதன்போது மிகப் பெரிய உடமை இழப்பை ஏற்படுத்தியிருந்ததுடன், பல உயிர்களையும் காவு கொண்டிருந்தது.
இந்த சூறாவளியில் மட்டக்களப்பு மாவட்டத்தின் சுமார் 80 வீதமான மரங்களை வேரோடு பிடுங்கியெறியப்பட்டதாக, அந்த சம்பவத்தை கண்டவர்கள் பலரும் தற்போது தெரிவிக்கின்றனர்.
இந்த சூறாவளி தொடர்பான கதைகளை பிற்காலங்களில் சொல்லும் போது “கல்லடி சாந்தி திரையரங்கில் இருந்த டென்ட் காற்றில் தூக்கி எறியப்பட்டதாகவும் அது பின்னர் படுவான்கரையில் இருந்து கண்டு எடுக்கப்பட்டதாகவும்” ஒரு கதை சொல்லப்படுகின்றது.
அத்துடன் ஒரு வீட்டுத் தென்னை மரம் அடுத்த வீட்டுக் கிணற்றில் தலை கீழாய்க் கிடந்ததாகவும் அப்போது அந்த கூறாவளியை எதிர்கொண்டவர்கள் தெரிவிக்கினறனர்.
அவ்வப்போது இயற்கை இதுபோன்ற கோரதாண்டவமாடி மனித குலத்தை கொத்தாக பிடுங்கிக்கொண்டு போய் விடுகின்றமை நினைவுகூரத்தக்கது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்