மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ச்சியாக பாதிக்கப்படும் விவசாய நிலங்கள்

மட்டக்களப்பு மாவட்டத்தில் போரதீவு பற்று பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட வெல்லாவெளி பகுதியில் 7000 ஏக்கருக்கு மேற்பட்ட வயல் நிலங்கள் காணப்படுகின்றன.

இப் பகுதியில் வயல் நிலங்களில் காட்டு வேளாண்மை (ஒரு வகை புல்) அதிகரித்த வண்ணம் காணப்படுவதனால், அதனை அகற்றுவதில் விவசாயிகள் பாரிய சவால்களை எதிர் நோக்கி வருகின்றனர்.

காட்டு வேளாண்மை அகற்றுவதில் சில விவசாயிகள் நாட்டம் செலுத்தாத நிலையும் காணப்படுவதாகவும் விவசாயிகள் கருத்து தெரிவிக்கின்றனர்.

விளைச்சலின் இறுதி கட்டத்தில் இவ்வாறு தாம் பாதிக்கப்படுவதாகவும், காட்டு வேளாண்மை அதிகரிப்பினால் எதிர்பார்த்த விளைச்சலை பெற்றுக்கொள்ள முடியாத நிலை உருவாவதாகவும் கருத்து தெரிவிக்கின்றனர்.

கடந்த வருட இறுதியில் ஏற்பட்ட வெள்ள நிலைமையினால் பாதிக்கப்பட்ட நிலையில், விவசாயிகள் தொடர்ந்து பாதிக்கப்படுவதனால் தமது குடும்பங்கள் பொருளாதார சிக்கல்களை எதிர்கொள்வதாக தெரிவித்துள்ளனர்.

எனவே இவ்வாறான நிலையில் விவசாயிகளுக்குரிய மானிய உரங்கள், நட்ட ஈடுகள் வழங்கப்படுவதில் திருப்தியற்ற சூழல் காணப்படுவதாகவும் விவசாயிகள் கருத்து தெரிவிக்கின்றனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்