மட்டக்களப்பு காத்தான்குடியில் மீட்கப்பட்ட மீனவரின் சடலம்

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாலமுனை நடுத்துறை கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது தவறி விழுந்து காணாமல் போன மீனவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

பாலமுனையைச் சேர்ந்த குடும்பஸ்தரான ஷாகுல் ஹமீத் முஹம்மத் பஷீர் (வயது – 59) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சம்பவம் குறித்து மேலும் தெரிய வரகையில்,

கடலுக்கு நேற்று திங்கட்கிழமை இரவு மீன்படிக்கச் சென்ற குறித்த மீனவர் இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை மீன்பிடித்து விட்டு படகின் ஒரு பகுதியில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்த போது தவறி விழுந்து காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது .

காணாமல் போன குறித்த மீனவரை தேடும் பணிகள் பாலமுனை மற்றும் பூநொச்சிமுனை கடல் பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட்ட நிலையில் இன்று பகல் காத்தான்குடி கடல் பிரதேசத்தில் சுழியோடிகளால் இவரது சடலம் மீட்கப்பட்டது.

காத்தான்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்

மின்னல்24 இணைய வானொலி
கேட்க கிளிக் செய்க