மட்டக்களப்பு ஏறாவூரில் ஹெரோயினுடன் பெண் உட்பட மூவர் கைது

மட்டக்களப்பு, ஏறாவூர் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட மீராகேணி பகுதியில் உள்ள வீடொன்றில் போதைப்பொருளுடன் பெண் உட்பட இருவர் சந்தேகத்தின் பேரில் நேற்று திங்கட்கிழமை   கைது செய்யப்பட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் ஏறாவூர் பிரதேசத்தைச் சேர்ந்த 24, 33 மற்றும் 36 வயதுடையவர்கள் ஆவர்.

Shanakiya Rasaputhiran

ஏறாவூர் பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடமிருந்து 11 கிராம் 230 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருள், 10,500 ரூபா பணம் மற்றும் போதைப்பொருள் பொதி செய்வதற்கு பயன்படுத்தப்படும் உபகரணங்கள் என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Poineer Hospital Owner
Jana Uncle Post Ad