பண்டிகையை முன்னிட்டு மட்டக்களப்பில் 50 பேருக்கு உலர் உணவுப் பொதிகள் பொலிஸாரால் வழங்கிவைப்பு:
நத்தார் பண்டிகையை முன்னிட்டு மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலைய பொலிஸார், வறுமைகோட்டிலுள்ள 50 பேருக்கு வர்த்தகர் ஒருவரின் நிதியுதவியுடன் தலா 10 ஆயிரம் ரூபா பெறுமதியான உலர் உணவு பொதிகளை நேற்று திங்கட்கிழமை வழங்கி வைத்தனர்.
பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் ஜி.எம்.பி.ஆர்.பண்டார தலைமையில், மக்கள் தொடர்பாடல் பொலிஸ் பொறுப்பதிகாரி எஸ்.எம்.சதாத் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில், மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜி. லலித் லீலாரத்ன, தெரிவு செய்யப்பட்ட மக்களுக்கு உலர் உணவுப் பொருட்களை வழங்கி வைத்தார்.
இந்நிகழ்வில் அதிதிகளாக மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜி. லலித் லீலாரத்னா, மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் கே.எம்.ஏ.கே. பண்டார, பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் ஜி.எம்.பி.ஆர்.பண்டார ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்