மட்டக்களப்பில் உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் உயிர் நீத்தவர்களுக்கான அஞ்சலி

மட்டக்களப்பில் இன்று ஞாயிற்று கிழமை உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் உயிர் இழந்தவர்களை நினைவு கோரி அஞ்சலி செலுத்தப்பட்டது.

காந்தி பூங்காவில் மட்டக்களப்பு மாநகர சபையினால் அமைக்கப்பட்ட உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் உயிர் நீத்தவர்களுக்கான தூவியில் இன்று காலை 7 மணியளவில் விளக்கு ஏற்றி வைத்து சமய ஆராதனைகளுடன் இந்த அஞ்சலி செலுத்தப்பட்டது.

இதன் போது மட்டக்களப்பு மாநகர சபையின் முன்னாள் முதல்வர் தி.சரவணபவன், மட்டக்களப்பு மாநகர சபையின் முன்னாள் பிரதி முதல்வர் கந்தசாமி சத்தியசீலன் , மற்றும் முன்னாள் உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்