மட்டக்களப்பிலிருந்து பயணித்த கார் தனியார் பேருந்துடன் மோதி விபத்து!

-பதுளை நிருபர்-

பசறை-பதுளை வீதியில் ஒன்பதாம் கட்டை கோணகலைக்கு செல்லும் சந்திக்கு அருகாமையில், கார் ஒன்றும் தனியார் பேருந்து ஒன்றும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக, பசறை பொலிஸார் தெரிவித்தனர்.

மட்டக்களப்பில் இருந்து பதுளை நோக்கி சென்று கொண்டிருந்த கார் ஒன்றும், பதுளையிலிருந்து பிபிலை நோக்கி சென்று கொண்டிருந்த தனியார் பேருந்து ஒன்றுமே, இவ்வாறு மோதி விபத்துக்குள்ளாகி உள்ளது

காருக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாகவும், வாகனங்களில் பயணித்தவர்கள் எவருக்கும் உயிர் சேதமோ, காயங்களோ ஏற்படவில்லை, என பொலிஸார் தெரிவித்தனர்.

மேலதிக விசாரணைகளை பசறை போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

தற்போது நாட்டில் நிலவிவரும் சீரற்ற காலநிலையின் காரணமாக, பதுளை பகுதியில் கடும் பனிமூட்டம் காணப்படுவதால், வாகன சாரதிகள் கவனமாக பயணிக்குமாறு, கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்

Minnal24 FM