மட்டக்களப்பின் பிரபல ஆண்கள் பாடசாலைகளுக்கிடையிலான “மாபெரும் கிரிக்கட் சமர்” ஆரம்பம்
மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரி மற்றும் மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரி ஆகியவற்றிற்கிடையேயான மாபெரும் கிரிக்கெட் சமரின் ஆரம்ப நிகழ்வு இன்று சனிக்கிழமை மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் இடம்பெற்றது.
இலங்கை மெதடிஸ்த திருச்சபையின் வடக்கு – கிழக்கு திருமாவட்ட அவையின் தலைவரான அருள் திரு.அருளானந்தம் சாமுவேல் சுபேந்திரன் ஆலோசனையின் கீழ் பாடசாலையின் அதிபர் ஆர்.பாஸ்கரன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கலந்து கொண்டார்
மேலும் சிறப்பு அதிதிதிகளாக மட்டக்களப்பு கல்வி வலயத்தின் பிரதி திட்டமிடல் பணிப்பாளர் திருமதி சி.சுபாகரன் மற்றும் ஸ்ரீலங்கா டெலிகொம் கிழக்கு மாகாண பொது முகாமையாளர் வி.கோபிநாத் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.
அத்துடன் வலயக்கல்வி அலுவலக அதிகாரிகள், பாடசாலை அபிவிருத்தி குழு உறுப்பினர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்