மஞ்சள் பூசணிக்காய் பயன்கள்

மஞ்சள் பூசணிக்காய் பயன்கள்

மஞ்சள் பூசணிக்காய் பயன்கள்

🟠பூசணியில் மாவுச்சத்து, புரதச்சத்து, கொழுப்புச்சத்து, இரும்புச்சத்து, பாஸ்பரஸ், பொட்டாசியம், மெக்னீசியம், துத்தநாகம், சுண்ணாம்பு போன்ற சத்துகள் உள்ளன. மேலும், வைட்டமின் சி, கரோட்டின் போன்றவை உள்ளன. பூசணியிலிருந்து இனிப்புகள் தயாரிக்கப்படுகின்றன. பூசணி சதையிலிருந்து அல்வா தயாரிக்கப்படுகிறது. பூசணி விதைகளிலிருந்து ஒருவகையான எண்ணெய் எடுக்கப்படுகிறது. இந்த எண்ணெய் நரம்பு டானிக்காக பயன்படுகிறது.  பரங்கிக்காய் என்று அழைக்கப்படும் மஞ்சள் பூசணிக்காய் குளிர் காலங்களில் கிடைக்கக்கூடிய காயாகும்.

மஞ்சள் பூசணிக்காயின் பயன்கள்

🍁மஞ்சள் பூசணியில் பீட்டா கரோட்டீன் மற்றும் வைட்டமின் ஏ அதிகமாக உள்ளன. ஒருவரது உடலில் வைட்டமின் ஏ குறைபாடு ஏற்பட்டால் தான், அது கண் பிரச்சனைகளை உண்டாக்கும். ஆகவே மஞ்சள் பூசணியை உட்கொண்டு வந்தால், கண் தொடர்பான பிரச்சனைகள் தடுக்கப்பட்டு, கண் பார்வை மேம்படும்.

🍁தினமும் ஒரு டம்ளர் மஞ்சள் பூசணி ஜூஸை குடித்து வந்தால் உடலின் வெப்பநிலையை சீராக வைத்து கொள்ளும். எனவே கோடைக்காலங்களில் உடல் சூடு அதிகரிக்காமல் இருக்க பூசணி ஜூஸ் குடிக்கலாம்

🍁மஞ்சள் பூசணியில் வைட்டமின் இ உள்ளதால் சரும ஆரோக்கியத்தில் இது முக்கிய பங்கு அளிக்கிறது. பூசணிக்காய் நரம்புகள் சம்பந்தப்பட்ட நோய்களுக்கு நல்ல  பயனை அளிக்கிறது.

🍁மஞ்சள் பூசணிக்காய் சதையை அரைத்து புண்கள் மேல், தீப்பட்ட மற்றும் சுடுநீர் பட்ட காயம் மேல் பூசிவர புண்கள் ஆறிவிடும்.

🍁பூசணிக்காயை அடிக்கடி உணவில் சேர்த்து வர மலச்சிக்கல் தீரும். பூசணி விதைகளைத் தூளாக்கி, நீரில் குழைத்து பூச்சி, பூரான் கடித்த இடத்தில் பூசிட வலி, விஷம் இறங்கும்.

🍁பீட்டா கரோட்டீன், ஆல்பா கரோட்டீன் மஞ்சள் பூசணியில் அதிகம் உள்ளதால், இதனை சாப்பிட்டு வந்தால் வயிற்று புற்றுநோயின் அபாயம் கணிசமாக குறையும்.

🍁மஞ்சள் பூசணி விதைகளில் நார்ச்சத்தும்இ ஒற்றை – நிரம்பாத கொழுப்பு அமிலமும் உள்ளன. இது இதய ஆரோக்கியத்துக்கு உதவுகிறது. இதில் ட்ரிப்டோஃபன் எனப்படுகிற அமினோ அமிலம் உள்ளது. 1 டீஸ்பூன் மஞ்சள் பூசணி விதையை தினமும் எடுத்துக் கொள்வதன் மூலம் நமது முழு ஆரோக்கியத்தையும் பாதுகாக்கலாம். இதில் உள்ள அதிக அளவு நார்ச்சத்து மலச்சிக்கலை விரட்டுகிறது.

🍁மஞ்சள் பூசணிகாய் கல்லீரல் மற்றும் சிறுநீரகங்களுக்கு மிகவும் நல்லது. சிறுநீரகங்கள் சிறப்பாக செயல்பட மஞ்சள் பூசணிகாய் உதவுகிறது. மேலும் சிறுநீரக கற்கள் மற்றும் பித்தப்பை பிரச்சனை உள்ளவர்கள் பூசணிக்காய் ஜூஸை தினமும் மூன்று வேளை அரை டம்ளர் அளவு தொடர்ந்து 10 நாட்கள் குடித்து வந்தால் இப்பிரச்சனைகளிலிருந்து விடுபடலாம்.

🍁பூசணி விதைகளை கைப்பிடி அளவு எடுத்து, அரை லிட்டர் தேங்காய் எண்ணெயிலிட்டு காய்ச்சி வைத்துக்கொண்டு தலையில் தேய்த்து குளித்து வர பேன் ஒழியும், முடி வளரும்.

🍁 ஒரு கப் நீரில் ஒரு தேக்கரண்டி பூசணிக் சாறு கலந்து வெறும் வயிற்றில் அருந்திவர வயிற்றுப்புண் குணமாகும். உணவுப்பாதையில் ஏற்படும் வீக்கம் குணமாகும்.

மஞ்சள் பூசணிக்காய் பயன்கள்

 

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்