பொடுகுத்தொல்லை நீங்க வீட்டு வைத்தியம்
பொடுகுத்தொல்லை நீங்க வீட்டு வைத்தியம்
பொடுகுத்தொல்லை நீங்க வீட்டு வைத்தியம்
🟣பொடுகு என்பது நிரந்தரமாக போக கூடிய பிரச்சனை அல்ல. தலைமுடியை சுத்தமாக வைத்திருந்தாலும் இரண்டு அல்லது மூன்று நாள் உரிய பராமரிப்பு இல்லாவிட்டாலும் கூட பொடுகு வெளிப்படும். பிறகு கூந்தலை சுத்தமாக வைக்கும் போது இவை மறையக்கூடும். ஆனால் வெகு சிலருக்கு மட்டுமே இப்படி இருக்கும்.
🟣அழுக்கான, பிசுபிசுப்பான முடியில் பொடுகு நிச்சயம் இருக்கும். முடியின் சுத்தமின்மை, தூசு, ஹார்மோன்கள், அதிக கெமிக்கல் ஷாம்பு போன்ற பல காரணங்களால் பொடுகு பிரச்னை வரலாம். அவற்றுக்கெல்லாம் நிரந்தர தீர்வுகள் உண்டு. உங்களது வீட்டில் உள்ள பொருட்களை வைத்தே பொடுகை விரட்ட முடியும். அது என்ன பொருட்கள் என்பதை இப் பதிவில் பார்ப்போம்.
📍ஒரு டீஸ்பூன் பேக்கிங் சோடாவுடன் 6 டேபிள் ஸ்பூன் நீர் சேர்த்துக் கலக்கவும். இதைத் தலைமுடி மற்றும் மண்டையில் நன்கு தேய்க்கவும். 2 நிமிடம் அப்படியே ஊறவிட்டு, வெறும் நீரால் முடியை அலசவும். ஷாம்பு பயன்படுத்த கூடாது. பொடுகுகள் தலையில் இருந்தால், அவற்றை நீக்கும். இப்படி வாரத்துக்கு இருமுறை செய்ய வேண்டும்.
📍5 டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெயை லேசாக சூடாக்கி, மண்டை, முடியின் வேர்கால்களில் தடவி, ஒரு மணி நேரம் ஊறவிட்டு பின்னர் ஷாம்பு போட்டு அலசுங்கள். இப்படி வாரம் 4 முறை செய்து வர பொடுகு நீங்கும்.
📍இரண்டு டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு எடுத்து தலையில் நன்கு மசாஜ் செய்யுங்கள். 5 நிமிடங்களுக்கு ஊறவிடுங்கள். பிறகு அதை தண்ணீரால் நன்கு அலசிவிடுங்கள். ஒரு கப் தண்ணீரில் ஒரு டீஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்துக் அலசிவிடவும். இவற்றால் அப்படியே முடி மற்றும் மண்டையில் படும் படி அலசவும். பின்னர் முடியை அப்படியே விட்டு விடலாம். விரைவில் பொடுகு நீங்கும்.
📍வீட்டில் உள்ள கல்லுப்பை தூளாக்கிக்கொள்ளவும். அவற்றை முடியின் வேர்க்கால்கள், தலையில் தேய்த்து மசாஜ் செய்யவும் 5 நிமிடங்கள் ஊறவிட்டு, பின் முடியை ஷாம்பு போட்டு அலசிவிடுங்கள். இப்படி வாரம் 3 முறை செய்து வந்தால் பொடுகுத்தொல்லை நீங்கும்.
📍இரவு முழுவதும் வெந்தயத்தை ஊற வைக்கவும். மறுநாள் காலையில் சிறிது நீர்விட்டு அரைத்து, தலையில் தேய்த்து விடவும். அரை மணி நேரம் கழித்து மிதமான ஷாம்புவால் அலசிவிடுங்கள். இவ்வாறு செய்து வந்தால் பொடுகுத்தொல்லை நீங்கும்.
📍பூண்டு பொடுகை உண்டாக்கும் நுண்ணுயிர்க்கிருமிகளை வெளியேற்றும் குணங்களை கொண்டவை. பூண்டையும் கிராம்பையும் இடித்து மைய அரைக்கவும். இதனுடன் தேன் கலந்து நன்றாக குழைத்து கூந்தல் முழுவதுமாக தடவி விடவும். 20 நிமிடங்கள் கழித்து விரல்களால் தலையில் வைத்து அலசி விடவும். பூண்டு பொடுகை நீக்குவதில் அதிக வலிமையோடு செயல்படும். வாரத்தில் இரண்டு அல்லது மூன்று நாட்கள் வரை செய்யலாம்.
📍பொடுகுத்தொல்லையை நீக்கும் பொருட்களில் ஒலிவ் எண்ணெய்யும் ஒன்றாகும். இதனை தலைமுடியில் தேய்ப்பதன் மூலம் நல்ல தீர்வு கிடைக்கும்.
பொடுகுத்தொல்லை நீங்க வீட்டு வைத்தியம்
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்