பூஸா சிறைச்சாலை அதிகாரியின் துப்பாக்கிச்சூட்டுடன் தொடர்புடைய சந்தேக நபர் கைது

பூஸா உயர் பாதுகாப்பு சிறைச்சாலையின் முன்னாள் சிறைச்சாலை அதிகாரி சிறிதன் தம்மிக்க சுட்டு கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய துப்பாக்கிதாரி கைது செய்யப்பட்டுள்ளார்.

அம்பலங்கொடையைச் சேர்ந்த 31 வயதுடையவரே இதன் போது கைது செய்யப்பட்டுள்ளார்.

போலி கடவுச்சீட்டைப் பயன்படுத்தி தாய்லாந்தின் பெங்கொக் நகரை நோக்கிச் செல்ல முற்பட்ட போதே கட்டுநாயக்க சர்வதேச விமானநிலையத்தில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் அம்பலாங்கொட தலைமையக பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

காலி, தலகஹ பிரதேசத்தில் கடந்த மார்ச் மாதம் 13 ஆம் திகதி இந்த துப்பாக்கிச்சூட்டுப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்

மின்னல்24 இணைய வானொலி
கேட்க கிளிக் செய்க