பூனை குறுக்கே வந்தால் என்ன பயன்.

பூனை குறுக்கே வந்தால் என்ன பயன்

பூனை வளர்ப்பவர்களுக்குத் தெரியும், பூனை மிகவும் பசியுடன் இருக்கும் பொழுதோ அல்லது அதற்கு நீங்கள் உணவு எடுத்துச் செல்லும்போதோ அது உங்கள் கால்களை உரசி, உங்கள் முன்னால் குறுக்கே குறுக்கே வந்து நிற்கும், சமயங்களில் நீங்கள் தடுக்கி விழும் அளவுக்குக் கூட!

எங்காவது நீங்கள் அவசரமாகப் புறப்படும் சமயத்தில் பூனை இது போல் செய்தால் என்ன நினைப்பீர்கள்? “முக்கியமான வேலைக்குச் செல்லும் போது இந்தப் பூனை குறுக்கே வந்து காரியத்தைக் கெடுக்கிறதே” என்று நினைக்கக் கூடும் அல்லவா? பூனை குறுக்கே சென்றாலே அபசகுனம் என்ற நம்பிக்கையாகியிருக்கும்.

♦நான் அறிந்த வரையில் .. மன்னர் காலத்தில் ஒரு பகுதியை கைப்பற்ற படைகள் செல்லும் போது…அவர்கள் தேர்ந்தெடுக்கும பாதையில் ஏதேனும் பூனை குறுக்கே சென்றால் அந்த பாதையை அவர்கள் பின்பற்றாமல் விட்டுவிடுவார் காரணம்.

♦படை வீரர்கள் இன்னொரு நாட்டின் மேல் போர் தொடுக்க செல்லும் போது ஒவ்வொரு ஊர் வழியாக தான் செல்வர்.

♦அதனால், பூனை குறுக்கே சென்றால், அந்த பகுதியில் மக்கள் வாழ்கிறார்கள், அங்கே செல்வது கூடாது என்று படைவீரர்கள் வேறு பாதை நோக்கி செல்வார்கள்.

கருப்பு பூனை குறுக்கே வந்தால் நல்லதா? கெட்டதா?

நாம் வெளியே செல்லும் போது பூனை குறுக்கே செல்ல கூடாது என்பதும். முக்கியமான வேலைகளை அல்லது காரியங்களை செய்ய வீட்டை விட்டு வெளியேறும் போதோ அல்லது செல்லும் வழியிலோ பூனைகள் சாலையின் குறுக்கே நம்மை கடந்து செல்வது அபசகுணமாக கருதப்படுகிறது. அதிலும் கருப்பு பூனை குறுக்கே வந்தால் உடனடியாக வாகனத்தை நிறுத்தி விடும் பழக்கம் நம்மவர்களிடையே அதிகம் காணப்படுகிறது.

கருப்பு பூனை குறுக்கே செல்வது ஏன் அபசகுணமாக கருதப்படுகிறது என்பதற்கான சில காரணங்களை இங்கேபார்க்கலாம்

 

🔻இந்து ஜோதிடத்தின்படி கருப்பு நிறம் பொதுவாக சனி பகவானுடன் தொடர்புடையது.
🔻 ஒரு கருப்பு பூனை உங்கள் பாதையில் குறுக்கிட்டால் நீங்கள் அவ்விடத்தை கடந்து செல்வதற்கு முன் வேறு யாரையாவது கடந்து செல்ல அனுமதிக்க வேண்டும் என்று கூறப்படுகிறது.
🔻இப்படி செய்வது உங்களை தாண்டி செல்லும் முதல் நபருக்கு எல்லா துரதிர்ஷ்டங்களும் சென்று விடும் உங்களுக்கு எதிர்மறை பாதிப்புகள் ஏதும் இருக்காது என்று நம்பப்படுகிறது.
🔻மேலும் கருப்பு பூனை உங்கள் பாதையின் குறுக்கே போவது சனி மற்றும் ராகு இருவரின் கோபமும் சேர்ந்து உங்கள் வழியை தடுக்கும் அறிகுறியாகவும் எடுத்து கொள்ளப்படுகிறது. எனவே கருப்பு பூனையைப் பார்த்த பிறகு சிறிது நேரம் காத்திருப்பது கடவுள்களின் கோபத்தை தணிக்கும் என்று நம்பப்படுகிறது.
🔻ஒரு கருப்பு பூனை உங்கள் பாதையில் குறுக்கிட்டால் நீங்கள் அவ்விடத்தை கடந்து செல்வதற்கு முன் வேறு யாரையாவது கடந்து செல்ல அனுமதிக்க வேண்டும் என்று கூறப்படுகிறது.

ஜோதிட சாஸ்திரம் ஒருபக்கம் இருந்தாலும் தற்போது பின்பற்றப்படும் இந்த வழக்கத்திற்கு வழிவகுத்ததாக நம்பப்படும் மற்றொரு சுவாரஸ்ய வரலாறு ஒன்றும் உள்ளது

. சாதாரண மக்களின் போக்குவரத்துக்கான முதன்மையான வழியாக மாட்டு வண்டிகள் இருந்த நேரத்தில் வண்டிகளில் பூட்டப்பட்டிருந்த காளைகள் தங்கள் வழியில் கருப்பு பூனைகளைக் கண்டவுடன் வெறி கொண்டதோடு நேர் வழியில் பயணிக்காமல் இஷ்டத்திற்கு துள்ளி குதித்து ஓடி வண்டியில் வருபவர்களுக்கு காயங்களை ஏற்படுத்தியது. எனவே மக்கள் மாடுகளை சமாதானப்படுத்த வேண்டியிருந்தது.

இதற்கு சிறிது நேரம் எடுத்தது. எனவே தான் செல்லும் வழியில் கருப்பு பூனை அல்லது பூனையை கண்டவுடன் சிறிது நேரம் நின்று இந்த அந்த இடத்தை விட்டு புறப்படுவது வழக்கமாகிவிட்டதாக கூறப்படுகிறது.

பல ஆண்டுகளாக பின்பற்றப்பட்ட இப்பழக்கம் படிப்படியாக ஒரு மூடநம்பிக்கையாக மாறியது. மக்களும் பூனைகள் குறிப்பாக கருப்பு பூனைகள் தங்கள் வழியில் குறுக்கிட்டால் பயணத்தை நிறுத்தும் நடைமுறையை இன்று வரை பின்பற்றி வருவதாக கூறப்படுகிறது.

ஆகவே இதெல்லாம் வெறும் நம்பிக்கைகள். இனி எங்காவது செல்லும் போது பூனை குறுக்கே வந்தால் கவலைப்படாதீர்கள். உங்கள் நோக்கங்கள் மீது நம்பிக்கை கொள்ளுங்கள். உங்கள் நம்பிக்கையை ஒரு சிறு பூனையிடம் அடகு வைக்காதீர்கள்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்