புனித ஹஜ் யாத்திரை : 14 ஜோர்தானியர்கள் உயிரிழப்பு

சவுதி அரேபியாவில் புனித ஹஜ் யாத்திரையின் போது 14 ஜோர்தானிய யாத்திரிகர்கள் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

அவர்களில் சிலர் அதிக வெப்பம் காரணமாக உயிரிழந்ததாக ஜோர்தான் வெளியுறவு அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.

அத்துடன் 17 பேர் காணாமல் போயுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவித்துள்ளன.

இதேவேளை  இன்று திங்கட்கிழமை  மக்காவில் 47 பாகை செல்சியஸ் வரையில் வெப்பம் பதிவாகக்கூடும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த வருடம் புனித ஹஜ் யாத்திரைக்காக 1.8 மில்லியனுக்கும் அதிகமான யாத்திரிகர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்