புத்தக விற்பனை நிலையத்தின் உரிமையாளர் மீது தாக்குதல்: சமரசம் செய்ய வந்தவருக்கு நேர்ந்த கதி

பன்னிபிட்டிய பிரதேசத்தில் உள்ள புத்தக விற்பனை நிலையமொன்றில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டதில் கடை உரிமையாளரும் மற்றுமொருவரும் காயமடைந்து ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,

பன்னிபிட்டிய மாம்புல்கொட பிரதேசத்தில் உள்ள புத்தக நிலையத்திற்கு வந்த நபரொருவரால் கடையின் உரிமையாளர் தாக்கப்பட்ட வேளை சம்பவத்தை சமரசம் செய்ய வந்த ஒருவருக்கும் கழுத்தில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தாக்குதல் தொடர்பில் ஹோமாகம தலைமையகப் பொலிஸாரின் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.