புகையிரதம் மோதி பெண் பலி

-வவுனியா நிருபர்-

வவுனியா, ஓமந்தையில் புகையிரதம் மோதி பெண் ஒருவர் மரணமடைந்துள்ளதாக ஓமந்தைப் பொலிசார் தெரிவித்தனர்.

யாழில் இருந்து வவுனியா நோக்கி நேற்று செவ்வாய்க்கிழமை மாலை சென்ற புகையிரதமானது புளியங்குளம் பகுதியை கடந்து ஓமந்தையை நோக்கி நகர்ந்த போது புகையிரத தண்டவாளத்தில் நடந்து சென்ற பெண் மீது புகையிரதம் மோதி விபத்துக்குள்ளானது.

இதில்இ குறித்த பெண் சம்பவ இடத்திலேயே மரணமடைந்துள்ளார். மரணமடைந்தவர் சுமார் 35-45 வயது மதிக்கத்தக்கவர் எனவும்இ இதுவரை சடலம் அடையாளம் காணப்படவில்லை எனவும் தெரிவித்த ஓமந்தைப் பொலிசார் குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் தெரிவித்தார்.