புகையிரதத்தில் மோதி யானை உயிரிழப்பு

முல்லைத்தீவு முறிகண்டி புகையிரத நிலையத்திற்கு அருகில் இன்று செவ்வாய் கிழமை பிற்பகல் 6.15 மணியளவில் யானை புகையிரத்துடன் மோதி விபத்துக்குள்ளாகிய நிலையில் உயிரிழந்துள்ளது.

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த உத்திரதேவி புகையிரதத்துடன் மோதியே விபத்துக்குள்ளானது.

விபத்து தொடர்பில் பொலிசார், வனஜீவராசிகள் திணைக்களத்தினருக்கு புகையிரத அதிகாரிகளால் தகவல் வழங்கப்பட்டுள்ளதை அடுத்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

 

Minnal24 FM